tamilnadu

img

இனி ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி?

வங்கியிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கறுப்புப் பண பதுக்கலை ஒழிக்கும் முயற்சியாக ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆர்.டி.ஜி.எஸ், மற்றும் நெஃப்ட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணத்தை நீக்கியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதை அடுத்து, ஏ.டி.எம் கட்டணங்களையும் மறுபரிசீலனை செய்வதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வங்கியில் இருந்து ஆண்டுக்கு, ரூ.10 லட்சத்திற்கும் மேல் எடுப்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பவர்கள், ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு உள்ளது. இந்த நடவடிக்கையால் வருமான வரித் தாக்கலின் போது பரிவர்த்தனை விவரங்களை எளிமையாக ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்பது மத்திய அரசின் திட்டமாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

;